காரில் சிலிண்டர் வெடிப்பு: 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை.. டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

0 3684

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, இன்று காலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். அந்த நபர் யார் ?, கார் உரிமையாளர் யார்? என, தெரியாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காரில் கொண்டு வரப்பட்ட சிலிண்டர் வெடித்ததா?, அல்லது காருக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வெடித்ததா? என்றும் தெரியவில்லை. சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வந்த டிஜிபி சைலேந்திர பாபு , சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். என்ஐஏ அமைப்பின் உதவி கோரப்படுமா? என்ற கேள்விக்கு, தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது என பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments