36 செயற்கைகோள்களுடன் எல்விஎம்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்தியா.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

0 2515

இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் எல்விஎம்-3 ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய 2வது ஏவுதளத்திலிருந்து நள்ளிரவு 12.07 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட்டது.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எல்விஎம் -3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டதாகும். இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்டதாகும்.

செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய இணைப்புகளுக்காக 30 செயற்கைக்கோள்களுடன் அதிக எடை கொண்ட எல்விஎம் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதற்கு எனது பாராட்டுகள், எல்விஎம் 3 ராக்கெட்டானது, இந்தியாவின் சுயசார்பு தன்மைக்கு எடுத்து காட்டாகவும், செயற்கைக்கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்தும் சர்வதேச சந்தையில், இந்தியாவின் போட்டித் திறனை அதிகரிக்க செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments