நள்ளிரவில் பட்டாசு கடைகளில் அடுத்தடுத்து தீ விபத்து.. 25 அடி உயரத்திற்கு கொளுந்து விட்டு எரிந்த தீ..!

0 2958

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடமலைப்பேட்டையில் நள்ளிரவில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பதி- சென்னை வழித்தடத்தில் அமைந்துள்ள வடமலை பேட்டை என்ற ஊரில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்காக 10 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் அங்குள்ள ஒரு கடையில் திடீரென்று பற்றிய தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 5 கடைகளுக்கு பரவியதால் அங்கிருந்த பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்து சிதறின.

25 அடி உயரத்திற்கு கொளுந்து விட்டு எரிந்த தீயினை தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 20லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments