ஜார்க்கண்டில் 26 வயது இளம் மென் பொறியாளர் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்

0 3311

ஜார்கண்டின் சிங்பும் மாவட்டத்தில் 26 வயது மதிக்கத்தக்க பெண் மென்பொறியாளர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சாய்பாசா நகரைச் சேர்ந்த மென்பொறியாளரான பெண் ஊழியர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை, ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை தாக்கி அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் பேரில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments