வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை.. போலீசார் விசாரணை!

0 20096

அரியலூர் மாவட்டம் பெரியவளையத்தில் இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சனிக்கிழமையன்று மலர்விழி என்பவரும் கண்ணகி என்பவரும் வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில், வயல்பகுதியில் குடும்பத்தினர் அவர்களை தேடிச்சென்றனர்.

அங்கு இரு பெண்களும், உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்ததை அவர்கள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அணிந்திருந்த நகைகள் மாயமாகிருந்த  நிலையில், நகைக்காக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments