தலைமறைவான லோக்கல் மாடல் மீரா மிதுனை கண்டுபிடித்து தரும்படியும் தாயார் போலீசிடம் புகார்..!
சூப்பர் மாடல் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு சுற்றிவந்த நடிகை மீரா மிதுனை கண்டுபிடித்து தரும்படி அவரது தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மீரா மிதுன்,அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த நிலையில் மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தனது மகளின் செல்போன் எண் ஸ்விட்ச் செய்யப்பட்டு இருப்பதாக அவரது தாய் சியாமளா தெரிவித்துள்ளார்
Comments