ஹைதராபாத் - வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம் பறிமுதல்..!

0 6270

ஹைதராபாத்தில் கட்டுக்கட்டாக ஹவாலா பணத்துடன் காரில் வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சைனியத்குஞ்சி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பவர் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுவதாக வந்த தகவலையொட்டி  போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஜமீர்த்தா பஜார் பகுதியில் வாகன சோதனையில் சிக்கிய கமலேஷ் காரில் இருந்து எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றிய போலீசார், கமலேஷ் உள்ளிட்ட கூட்டாளிகள் 4 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments