தீபாவளியை ஒட்டி ஆதரவற்றோருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

0 2261

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு விலையில்லா வேட்டி சேலைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதில் சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வீடு தேடிச் சென்று மக்களின் குறைகளை கேட்டறியும் "நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க" திட்டத்தின் கீழ், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments