தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல்..!

0 2367

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்ததால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் சானடோரியம் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

இதே போல, செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடிகளிலும் அதிகப்படியான வாகனங்கள் வந்ததால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள், ரயில்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.

தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்காக காலை முதலே ஏராளமனோர் காத்துக் கிடந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments