கஞ்சா போதையில் ரகளை - போலீசார் எச்சரித்ததால் மாணவர் விடுதியில் விபரீத முடிவு..!

0 2812

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட போது போலீசார் பிடித்து எச்சரித்ததால், மனமுடைந்த 4ம் ஆண்டு கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தேனியைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவர், தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பயின்று வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு மாணவர் சதீஷ், சக மாணவர்களுடன் ஏ.கே.சமுத்திரம் பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மாணவர்களை பிடித்து எச்சரித்த போலீசார், தீபாவளிக்கு ஊருக்கு செல்லக்கூடாது என கூறியதோடு பெற்றோரை காவல் நிலையம் வரவழைக்கச் சொன்னதாக சொல்லப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த மாணவர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments