மனைவியை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய கணவன் கைது..!

0 2880

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மனைவியை கொன்று கோழிக்கழிவுகள் கொட்டப்படும் புதரில் வீசிவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

புத்தூர் வயல் பகுதியில் சேர்ந்த உஷா, கடந்த 19ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது சகோதரர் மற்றும் கணவர் மோகன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வீட்டில் சோதனை நடத்திய போது ரத்தக்கரை இருந்ததால் சந்தேகத்தின் பேரில் மோகனிடம் விசாரணை நடத்தினர்.

அதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த மோகன், உஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த 19ஆம் தேதி திருமணத்திற்கு சென்றுவிட்டு தாமதமாக வந்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில், உஷாவை தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததால், யாருக்கும் தெரியமால் சாக்கு மூட்டையில் கட்டி புதரில் வீசியுள்ளதாகவும் மோகன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments