சென்னையிலுள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் தீ விபத்து..!

0 2117

சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 கணினிகள், காசோலைகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.

மிண்ட் சந்திப்பில் உள்ள மூன்று மாடி கட்டடத்தின் முதலாவது தளத்தில் உள்ள வங்கி அலுவலகத்தில் இன்று அதிகாலை 6 மணிக்கு கரும்புகை கிளம்பியதால் அலாரம் ஒலித்துள்ளது.

உடனே செக்யூரிட்டி அளித்த தகவலின்பேரில் வந்த 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் , சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments