கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்த திகில் காட்சி..! பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்

0 4958

மனைவியை கத்தியால் குத்தி ரத்தக்களரியாக்கிவிட்டு தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

பெங்களூரு அடுத்த ஹோஸ்கோடா அடுத்த பில்லகும்பே தொழிற்பேட்டையில் உள்ள சொக்கஹள்ளி அருகே கையில் கத்தியுடன் நின்ற இளைஞர், பெண் ஒருவரை சரமாரியாக குத்திக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை தடுக்க முயலும் முன்பாக தன்னை தானே குத்திக் கொண்டார். ரத்தக்காயத்துடன் தள்ளாடிய அந்தப்பெண்ணை கட்டிப்பிடித்தபடி கீழே விழுந்தார். 

இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற நிலையில் அந்தப்பெண் உயிரிழந்தார்.

பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அந்த இளைஞர் உயிருக்கு போராடி வருகின்றார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரமேஷ், ஹர்ஷிதா என்ற அந்த இளம் தம்பதி இருவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவன் ரமேஷ், மனைவி ஹர்ஷிதாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மனைவி உயிரிழந்துவிட தன்னை கத்தியால் குத்திக் கொண்டும், தூக்கிட்டும் ரமேஷ் தற்கொலைக்கு முயன்ற தும் தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments