தீபாவளியை முன்னிட்டு 7 நாட்களுக்கு வாகனங்களுக்கு அபராதம் கிடையாது..! குஜராத்தில் புதிய அறிவிப்பு...

0 2263

தீபாவளியை முன்னிட்டு 7 நாட்களுக்கு சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கிடையாது என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

வரும் 27ம் தேதி வரை ஹெல்மெட், சிக்னலில் நிற்காமல் போவது, போன்ற விதிமீறல்களுக்கு போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்கள் என்று அம்மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்வி அறிவித்துள்ளார்.

விதிகளை மீறுவோரை நிறுத்தி இப்படிச் செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தி போலீசார் மலர்க்கொத்துகளை வழங்குவார்கள் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இதனை பலர் வரவேற்று டிவிட்டர் பதிவு போட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments