மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. பிரசவத்துக்காக சென்ற நிறைமாத கர்ப்பிணி, அவரது தாய் உயிரிழப்பு..!

0 9396

சிவகங்கை இளையான்குடி அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பிரசவத்துக்காக சென்ற நிறைமாத கர்ப்பிணியும், அவரது தாயும் உயிரிழந்தனர்.

நெஞ்சத்தூரைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, அதிகாலை 4 மணியளவில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

செங்குளம் என்ற இடத்தில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நிவேதா, அவரது தாய் விஜயலட்சுமி உயிரிழந்த நிலையில், ஓட்டுநரும் பணியாளரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments