போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்லுவாங்க போல..! பல்பு வாங்கிய வசூல் பார்ட்டி

0 2960

டாஸ்மாக் கடை ஒன்றில் தீபாவளி வசூலுக்கு சென்ற அரசியல் பிரமுகரிடம் கடை ஊழியர் பணம் கொடுக்க மறுத்து வார்த்தைகளால் விரட்டி அடித்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகின்றது

டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வரை விலை வைத்து வாடிக்கையாளரிடம் கடை ஊழியர்கள் வசூலிப்பது வாடிக்கையாகி வருகின்றது.

இதனால் இந்தக் கட்சி அந்தக் கட்சி என்ற பேதமில்லாமல் ஆளாளுக்கு ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு அங்கு வசூலுக்கு செல்வது வழக்கம் அப்படி தீபாவளி வசூலுக்கு சென்ற அரசியல் பிரமுகர் ஒருவருக்கு பணம் கொடுக்க மறுத்த கடை ஊழியர் ஏட்டிக்கு போட்டியாக பேசி அவரை விட்டிவிட்டார்

தான் இவ்வளவு நேரம் எழுப்பிய உரிமைக்குரலை பின் பக்கம் இருந்து ஒருவர் செல்போனில் படம் பிடிப்பதை கண்டதும்  ஷாக்கான அந்த அரசியல் வாதியிடம் படம் பிடித்தவர் எந்தக்கட்சி என்று கேட்ட போது தான் ஆர்.எஸ்.பி என்று கூறினார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. புரட்சிகர சோசலிஸ்டு கட்சி ஆங்கிலத்தில் சுருக்கமாக ஆர்.எஸ்.பி என்று அழைக்கப்படுகின்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments