1,000 சிறிய ரக ஹெலிகாப்டர்களை வாங்க, ஒப்பந்த புள்ளியை வெளியிட்டது இந்திய ராணுவம்..!

0 2429

கண்காணிப்புப் பணிக்காக ஆயிரம் சிறிய ஹெலிகாப்டர்களை விரைந்து கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தபுள்ளியை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

அந்த ஹெலிகாப்டர்கள் 10 கிலோவுக்கும் மிகாத எடை கொண்டதாகும். வேகமாக காற்று வீசும்போதிலும், மிக உயரமாக பறக்கும் திறன் கொண்டவை.

அதில் ஒரு வீடியோ கேமராவும், இரவு நேர மோனோக்ரோமேடிக் தெர்மல் சென்சாரும், 2 பேட்டரிகளும் இருக்கும்.

அதிகபட்சமாக கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரம் வரையும், குறைந்தபட்சமாக தரைமட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்திலும் அதை இயக்க முடியும்.

பாகிஸ்தான், சீனா எல்லைகளில் நிலவும் பதற்றமான நிலையை கவனத்தில் கொண்டு, இந்த சிறிய ஹெலிகாப்டர்களை,  அவசர கால கொள்முதல் அதிகாரத்தின்கீழ்  விரைந்து வாங்க, இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments