'ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது?'' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

0 2476
'ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது?'' - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை, ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? என, சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்தும் தீர்ப்பை, மறு ஆய்வு செய்யக்கோரும் வழக்குகள், இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, பாக்கு மட்டையில் செய்த பொருட்கள், மண் குடுவை போன்றவை, எங்கு கிடைக்கும் என்பதன் விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிட, சென்னை மாநகராட்சிக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments