மியான்மர் சிறைக்கு வந்த பார்சல்களை ஊழியர்கள் பிரித்தபோது குண்டு வெடிப்பு - 8 பேர் உயிரிழப்பு

0 1746

மியான்மர் நாட்டின் யாங்கூனிலுள்ள மிகப்பெரிய சிறையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர்.

புதன்கிழமையன்று சிறைக்கு வந்த பார்சல்களை ஊழியர்கள் பிரித்து பார்த்த போது, அதிலிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இதில் சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளை பார்க்க வந்த பார்வையாளர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு மியான்மரின் ராணுவ ஆட்சி எதிர்ப்புக் குழு பொறுப்பேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments