பம் பஞ்சரான தம்பிக்கு கல்லூரி வாசலில் பக்குவமாய் பனிஸ்மெண்ட்..! விழுந்த இடத்தில் நிக்கிறாப்ல..!

0 2748

காரைக்குடியில் கல்லூரி மாணவிகள் முன்பு பந்தா காட்டுவதற்காக ஓடும் பைக்கின் இருக்கையில் இருந்து எழுந்து சாகசம் செய்ய முயன்று  தவறி விழுந்த இளைஞருக்கு, அதே கல்லூரி பேருந்து நிலையம் முன்பு  போக்குவரத்தை சரி செய்யும் பணியை நீதிமன்றம் தண்டனையாக வழங்கியது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் அழகப்பா பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றார். இவர் கடந்த செப்டம்பர் 30ந்தேதி காரைக்குடி கல்லூரி சாலையில் ரெயில்வே ஊழியரான கோபாலகிருஷ்ணன் என்பவரது பைக்கில் சென்றார். அப்போது பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகளை கண்டதும், பந்தா காட்டுவதற்காக ஓடும் பைக்கின் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து சாகசம் செய்ய முயன்று தவறி சாலையில் பொத்தென்று விழுந்தார்.

பந்தா காட்ட நினைத்த மகேஸ்வரனின் இருக்கை பஞ்சரான நிலையில் மாணவிகள் முன் அவமானப்பட்டதோடு கூட்டாளிகளுடன் போலீஸ் வழக்கிலும் சிக்கினார். ரெயில்வே ஊழியர் கோபாலகிருஷ்ணன், மாணவர் மகேஸ்வரன் மற்றும் சக மாணவர்கள் என்று 4 பேர் மீது அழகப்பபுரம் காவல் நிலையத்தில் போலீஸ் வழக்கு பதிந்து சாகசத்தில் ஈடுபட்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ரயில்வே ஊழியர் கோபாலகிருஷ்ணன் பின்னால் வந்த வாகனத்தில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த ஹரிஹரன் மற்றும் 17 வயது மாணவன் ஆகியோர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து ஜாமீனில் வீட்டுக்குச் சென்ற நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பஞ்சரான மகேஸ்வரன் மட்டும் போலீசுக்கு பயந்து மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை மகேஸ்வரனுக்கு ஒரு வாரம் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை காரைக்குடியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியினை தண்டனையாக வழங்கியது . அதனை தொடர்ந்து எந்த இடத்தில் பந்தா காட்டுவதற்காக சாலையில் விழுந்து சில்லரை அள்ளினாரோ அதே அழகப்பா கலைக் கல்லூரி எதிரில் மாணவர் மகேஸ்வரன் சின்சியராக போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

கெத்து என்ற பெயரில் மாணவர்கள் தன்னை போல தவறாக பைக் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என்று மகேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments