டெல்லியில் பட்டாசு வெடித்தால் ரூ.200 அபராதம்,6 மாதம் சிறை..!

0 2375

டெல்லியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ 200 ரூபாய் அபராதத்துடன், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

பட்டாசு தயாரிப்போர், விற்பனை மற்றும் சேமித்து வைப்போருக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர், கடந்த 16-ஆம் தேதி வரை தடையை மீறியதாக, 188 வழக்குகள் பதியப்பட்டு, 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments