திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம்..!

0 3224

திருப்பூரில் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மெத்தனப்போக்குடன் செயல்பட்ட விவேகானந்தா சேவாலய காப்பகம் ஏற்கனவே திருப்பூர் ஆட்சியர் வினீத் முன்னிலையில் மூடப்பட்டது.

இந்நிலையில், காப்பகங்களை சரி வர ஆய்வு செய்யாமல் இருந்ததாக  மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியாவை  பணியிடை நீக்கம் செய்து சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் நித்யா பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments