230 கி.மீ. வேகத்தில் சென்ற பி.எம்.டபிள்யூ சொகுசு கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!

0 10539

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் பயணித்த BMW சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.

சுல்தான்பூரில் இருந்து டெல்லி நோக்கி BMW சொகுசு காரில் 4 பேர் சென்றனர். அப்போது காரில் இருந்த ஒருவர் 230 கி.மீ வேகத்தில் கார் சென்றுகொண்டிருப்பதை முகநூலில் நேரடி ஒளிப்பரப்பு செய்துகொண்டிருந்தார்.

பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 4 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments