கஞ்சா வாங்க பணம் தராததால் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்
மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் தராததால் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
குதிரைக்காரர் வீதியை சேர்ந்த பத்மினி அதே பகுதியில் சங்கு, மணி, துப்பட்டா போன்றவைகளை விற்பனை செய்து வந்தார். கஞ்சா போதைக்கு அடிமையான இவரது இளையமகன் முரளி, வேலைக்கு போகாமல் இருந்து வந்துள்ளார்.
கஞ்சா போதையில் இருந்த முரளி மீண்டும் கஞ்சா வாங்க பணம் கேட்டதால் அவரது தாயார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது தாயாரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
நிலைத் தடுமாறி கீழே விழுந்தவரை அருகில் இருந்த கட்டையால் தலையில் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பத்மினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
Comments