உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் நியமனம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

0 2169

உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9-ந்தேதி பதவி ஏற்க உள்ளார்.

தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகிக்கும் யு.யு.லலித், வரும் நவம்பர் 8-ந்தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

இந்நிலையில், தனக்கு அடுத்த மூத்த நீதிபதியான சந்திரசூட் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு மத்திய அரசுக்கு யு.யு லலித் பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று, சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளார்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் சந்திரசூட் இருப்பார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments