லிட்டில் பிரின்சஸ் பேச்சை நம்பி பெண் கேட்டதால் காதலனை கும்மிய தந்தை..! அவமானத்தால் இளைஞர் தற்கொலை

0 7850

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் பேச்சை நம்பி, வீட்டுக்கு பெண் கேட்டுச்சென்ற புள்ளிங்கோ இளைஞரை மடக்கிப்பிடித்து பெண்ணின் தந்தை அடித்து உதைத்ததால் அந்த இளைஞர் மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2கே கிட்ஸின் விபரீத காதல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான ஏழுமலை - செல்வராணி தம்பதியரின் 21 வயது மகன் சாம்ராஜ். புள்ளிங்கோ சிகை அலங்காரத்துடன் வலம் வந்த இவர், தனது கிராமத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரைக் காதலித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சாம்ராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் சாம்ராஜ் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. ஆனால் அவரது பெற்றோரோ மாணவியின் தந்தை, தங்கள் மகனைத் தாக்கி அவமானப்படுத்தியதால் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

கடந்த 2 வருடங்களாக அந்த மாணவியை காதலித்த சாம்ராஜ் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது செல்போனில் பதிவேற்றம் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் மாணவியின் காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிய வந்ததும், அவரை உறவுக்கார இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த மாணவி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் சாம்ராஜிடம் இருப்பதாகக் கூறி அழுது உள்ளார். இதையடுத்து, மாணவியை வைத்தே தனது வீட்டுக்கு பெண் கேட்டு வரும்படி சாம்ராஜிடம் பேச வைத்துள்ளனர். மாணவி அழைத்ததால் தனது கூட்டாளிகள் உடன் அங்கு சென்றுள்ளார் சாம்ராஜ்.

கூட்டாளிகள் இருவரை வீட்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு , சாம்ராஜை மட்டும் மாணவியின் அப்பா உள்ளே அழைத்துச்சென்று கையை மடக்கிப்பிடித்து கும்மி எடுத்துள்ளார். தனது மகளுடன் நெருக்கமாக இருந்த வீடியோ எங்கே ? என்று கேட்டு செல்போனைப் பறித்ததாகவும், அதில் இருந்த அனைத்து வீடியோ புகைப்படங்கள வாட்ஸ் அப், முக நூல் சாட்டிங் அனைத்தையும் அழித்ததாகவும் கூறப்படுகின்றது.

வலிதாங்க இயலாமல் சாம்ராஜ் கதறி அழுத நிலையில் அருகில் இருந்த இளைஞர், இந்த பொண்ணை நான் தான் கல்யாணம் பண்ணிக்க போகிறேன், எங்க வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று எச்சரித்து வீட்டை விட்டு அடித்து விரட்டியதால் தங்கள் மகன் உயிரை மாய்த்துக் கொண்டதாக சாம்ராஜின் தந்தை ஏழுமலை தெரிவித்தார்

பள்ளிக்கூடம் செல்லும் மைனர் பெண்ணை காதலிப்பது குற்றம் என்றுகூட தெரியாமல் வீட்டுக்கு பெண் கேட்டு செல்லும் அளவில் தான் இன்றைய விபரீத காதலர்களின் மன நிலை உள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments