கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட 15 மாடுகள்.. தேடும் பணியில் கிராம மக்கள்..!

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 15 மாடுகளை தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.
இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், தோகூரில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 15 மாடுகளை, கரைகளில் ஏற்றுவதற்கு கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அந்த முயற்சிக்கு பலனளிக்கவில்லை.
Comments