வெள்ளத்தில் சிக்கி நசுங்கி போன சொம்பான மாருதி சுசுகி XL 6 கார்..!

0 6151

கல்வராயன் மலை பகுதியில் இரவில் பெய்த கனமழையால் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்தம் புதிய மாருதி சுசுகி எக்ஸ் எல் சிக்ஸ் கார் ஒன்று சிதிலமடைந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் நான்கு கிலோமீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு உடைந்து நொறுங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

இரு புல்டவுசர் எந்திரங்களுக்கு இடையே சிக்கியதால் மாருதி சுசுகி எக்ஸ் எல் சிக்ஸ் கார் இது போன்று உருகுலைந்து  நசுங்கி போன சொம்பாக கிடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் இந்த கார் குண்டு விழுந்தது போல உருக்குலைந்து காணப்படுகின்றது

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக வரலாறு காண அளவில் மழை பெய்து வருகிறது.

கல்வராயன் மலை அடிவார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதனால் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள காட்டாற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில் வெள்ளம் ஏற்பட்டது.

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தில் கோட்டப்பட்டி அடுத்த தாதன்கொட்டாய் கிராமத்தில் ஆற்றோரத்தில் உள்ள பாபோஜி ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய மாருதி சுசுகி XL 6 காரை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

காடு, மலை, கரடுமுரடான பாதைகளில் பாய்ந்தோடிய நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இழுத்துச்செல்லப்பட்ட இந்த காரின் சக்கரங்கள் அனைத்தும் பிய்த்துக் கொண்டு சென்று விட்டது.

மலையில் உருண்டு புரண்டு இழுத்துச்செல்லப்பட்டதால் கார் சுத்தமாக உடைந்து நொறுங்கி கண்டமானது

தனது புத்தம் புதிய காரின் நிலையை பார்த்து வாகன உரிமையாளர் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த காரை எடுத்துச்சென்று சர்வீஸ் செய்து கொடுப்பார்களா ? அல்லது புதிய கார் மாற்றிக் கொடுப்பார்களா ? என்ற கேள்வியுடன் காத்திருக்கின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments