உரிய இழப்பீடு வழங்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்கள் ஜப்தி!

0 2618

புறவழிச்சாலை அமைப்பதற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்பட்டி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நாற்காலி, மேஜை உள்ளிட்டவை ஜப்தி செய்யப்பட்டது.

கும்பகோணம் புறவழிச்சாலை அமைப்பதற்காக சுவாமிநாதன் என்பவரிடம் இருந்து 12,500 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு தொகையான 60 லட்ச ரூபாய், கடந்த 11 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

இதுதொடர்பான வழக்கில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருள்களை ஜப்தி செய்ய, நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதனையடுத்து ஜப்தி செய்ய கோட்டாட்சியர் அலுவலகம் சென்ற போது, மின்விசிறி ,கணினி, குளிர்சாதன கருவிகள் இல்லாததால் நீதிமன்ற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாற்காலி, மேஜை உள்ளிட்டவற்றை தனி அறையில் பூட்டி பொருட்களை கையகப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments