துணிச்சலான அஜித்துக்கு ஆக்சன் காட்சிகளில் அண்ணாசாலையில் டூப்..! காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள்.!

0 21190

தாய்லாந்து நாட்டில் இருந்து அஜீத் விமானம் மூலம்  சென்னை வந்திறங்கிய நிலையில் துணிவு படப்பிடிப்பிற்காக அண்ணாசாலையில் அஜீத்துக்கு பதில் டூப் நடிகரை பயன்படுத்தி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல என்று கடந்த காலங்களில் ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் சர்வசாதாரணமாக நடித்து காட்டியவர் நடிகர் அஜீத்குமார்..!

இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து துணிவு படத்தின் கதை நகர்வதாக சொல்லப்பட்ட நிலையில், அஜீத் போல வெள்ளை முடி கொண்ட ஆசாமி ஒருவர் முகமூடி அணிந்த படி தீயணைப்பு வாகனத்தின் மீது அமர்ந்து தனது சகாக்களுடன் வந்து கீழே குதிப்பது போல நடித்தார். 

அஜீத் படப்பிடிப்பு நடப்பதாக தகவல் பரவிய நிலையில் அவரை பார்ப்பதற்கு பெருங்கூட்டம் கூடியது.

முகமூடி ஆசாமி தான் அஜீத் என்று எல்லோரும் கூறிவந்த நிலையில் கடைசிவரை முகமூடியை கழட்டவில்லை.

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் புறப்பட்டுச்சென்றனர்.

இந்தநிலையில் தாய்லாந்தில் இருந்து திங்கட்கிழமை காலை அஜீத் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

துணிவு படப்பிடிப்பு முடிந்த கையோடு தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவை முடித்து விட்டு அஜீத் திரும்பியதாக தகவல் வெளியானது. அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை முகமூடியுடன் அஜீத் போல நடித்தவர் யார் ? என்று கேள்வி எழுந்தது.

அவர் ஒரு டூப்  நடிகர் என்றும் அஜீத் மற்றும் மஞ்சுவாரியர் போல சில டூப் நடிகர்களை பயன்படுத்தி அண்ணாசாலையில் , இயக்குனர் வினோத் ஆக்சன் காட்சிகளை படமாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த டூப் நடிகரை அஜீத் என நம்பி மணிக்கணக்கில் ரசிகர்கள் சாலையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments