வீட்டுப்படுக்கை அறையில் பதுங்கியிருந்த சுமார் 3 அடி நீள நாக பாம்பு.. பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு படையினர்..!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் வீட்டின் படுக்கை அறையில் புகுந்த சுமார் 3 அடி நீள நாகபாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர்.
கஸ்பா தெருவை சேர்ந்த கார்த்திசெல்வா என்பவர் வீட்டு படுக்கை அறையில் விநோத சத்தம் வந்தபடி இருந்தது.
சத்தம் வந்த இடத்தில் அவர் பரிசோதித்தபோது பதுங்கியிருந்த பாம்பு, அங்கிருந்து வெளியேறி தோட்டத்துக்குள் சென்றது.
இதுகுறித்து கார்த்தி செல்வா அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு துறையினர் வந்து, பாம்பு பிடிக்கும் சாதனத்தை கொண்டு பிடித்தனர்.
Comments