தமிழக காவல்துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் 'ஸ்மார்ட் காவலர்' என்ற புதிய செயலி அறிமுகம்..!

0 2158

ரோந்துப்பணிகளின்போது நிகழும் சம்பவங்களை, போலீசார் உடனுக்குடன் பதிவு செய்ய ஏதுவாக ”ஸ்மார்ட் காவலர்” என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையை நவீனமயமாக்கும் நோக்கில் டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்த இந்த செயலியின் மூலம், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்வதுடன், களப்பணியாற்றும் காவலர்களின் செயல்பாடுகளை உயரதிகாரிகள் கண்காணிக்க முடியும்.

மேலும், களத்தில் உள்ள காவலர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் இந்த செயலி உதவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments