உபேர் கார் டிரைவர் மோசமாக நடந்துகொண்டதாக நடிகை மானவ நாயக் புகார்.. பேஸ்புக்கில் டிரைவர் படத்துடன் பதிவிட்டு குற்றச்சாட்டு..!

0 2371

உபேர் நிறுவன டாக்சி ஓட்டுநர், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டு மிரட்டியதாக, நடிகையும் இயக்குனருமான மானவ நாயக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து முகநூலில் பதிவிட்ட அவர், நேற்று இரவு தனது வீட்டிற்கு டாக்சியில் சென்றபோது, போனில் பேசிக்கொண்டே ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியதாகவும், சாலை விதிகளை மதிக்காமல் காரை இயக்கியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவல்நிலையத்தில் காரை நிறுத்தக்கூறியதாகவும், அவர் வேண்டுமென்றே இருள்சூழ்ந்த பகுதியில் நிறுத்திவிட்டு சென்றதாகவும் நடிகை கூறினார்.

இது குறித்து உபேர் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை காவல் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments