எரிவாயு விலை அதிகரிப்பால் பியட் காரை, மின்சார காராக மாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியர்..!
எரிவாயு விலை அதிகரிப்பால் பியட் காரை, மின்சார காராக மாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியர்..!
1985ம் ஆண்டு பியட் காரை மின்சார காராக, எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாற்றியுள்ளார்.
அலி அல் சயீத் என்ற அவர், எரிவாயுவில் இயங்கும் பியட் 127 மாடல் காரை, 10 ஆயிரம் எகிப்து பவுண்டு கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, விலைக்கு வாங்கினார்.
எரிவாயு விலை அதிகரிப்பால், தற்போது அக்காரை, மின்சார சக்தியில் இயங்கும் காராக மாற்றியுள்ளார்.
காரை விட மின்சார வசதி பேட்டரி 6 மடங்கு விலை அதிகம் என்றபோதிலும், எரிவாயுவுக்கு அதிக விலை கொடுப்பதை விட,
இது மிச்சம்தான் எனவும் அலி அல் சயீத் தெரிவித்துள்ளார்.
Comments