கடின உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி பரிசு.. ஊழியர்கள் 28 பேருக்கு கார்கள், பைக்குகளை பரிசளித்த நகைக்கடை நிறுவனம்..!

0 2637

சென்னை மற்றும் மதுரையில் செயல்படும் சலானி ஜூவல்லர்ஸ் நிறுவனம், 28 ஊழியர்களுக்கு கார்கள் மற்றும் பைக்குகளை தீபாவளி பரிசாக அளித்து, ஆச்சரியபடுத்தியுள்ளது.

10ஆவது ஆண்டை நோக்கி பயணிக்கும் அந்நிறுவனம், தனது வெற்றிக்கு துணையாக இருந்த ஊழியர்களுக்கு தீபாவளி பரிசளித்தது.

நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவன உரிமையாளர் ஜெயந்திலால் சலானி, கடின உழைப்பை கவுரவித்ததாக கூறினார்.

200 க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், 28 பேருக்கு மட்டுமே பரிசளித்தது குறித்து பேசிய அவர், இது, பிறரையும் சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments