கூலித்தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு..!

0 2112
கூலித்தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு..!

பீகாரில் கங்கை - பரண்டி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

மர்கியா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 10 பேர், நேற்று பணி முடிந்து, வீடு திரும்பும்போது ஆற்றில் படகு கவிழ்ந்தது. 3 பேர் நீந்திக் கரையேறிய நிலையில், நேற்று இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் இன்று மற்ற 5 பேரின் சடலங்களை, பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments