தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம்..!

0 2886

தமிழகத்திலுள்ள 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கட்டண நிர்ணய குழு உத்தரவிட்டுள்ளது.

அதன் படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ஓராண்டுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டு முதல், 3 ஆண்டுகளுக்கு இக்கட்டணம் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ள கட்டண நிர்ணய குழு, கல்லூரி விடுதி மற்றும் பேருந்து கட்டணங்கள் இதில் அடங்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments