சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அதிபர் ஜின்பிங்..!

0 1683

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்தார்.

பெய்ஜிங்கில் 22ம் தேதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில்,  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பேசிய ஜின்பிங்,   சீனாவின் முழு கட்டுப்பாட்டுக்குள்  ஹாங்காங் கொண்டு வரப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

தைவானை தனி நாடாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாகவும்,  இதை ஒருபோதும் சீனா அனுமதிக்காது என்றும் ஜின்பிங் குறிப்பிட்டார்.

69 வயதாகும் ஜின்பிங், 2012 முதல் அதிபராக 2 முறை தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில் 3வது முறையாக அடுத்த 5 ஆண்டுக்கு மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments