ரூ.34 ஆயிரம் கோடி வங்கி மோசடி- டி.எச்.எப்.எல்.நிர்வாக இயக்குனர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

0 2209

34,000 கோடி ரூபாய் வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கபில் வதாவன் உள்ளிட்ட 74 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

யூனியன் பேங்க் இந்தியா உள்பட 17 வங்கிகள் கூட்டமைப்பில் 34 ஆயிரத்து 615 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் DHFL எனப்படும் திவான் வீட்டு வசதி நிதி கழக நிர்வாக இயக்குனர் கபில் வதாவன் உட்பட முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்ஷில் மேத்தா, இயக்குனர் தீரஜ் வதாவன் ஆகியோரும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments