சமையல் கேஸ் கசிவு காரணமாக மூச்சு திணறல்.. உள் பக்கமாக பூட்டிய வீட்டிற்குள் மயங்கிய நிலையில் இருந்த 4 பேர் மீட்பு..!

0 2906
சமையல் கேஸ் கசிவு காரணமாக மூச்சு திணறல்.. உள் பக்கமாக பூட்டிய வீட்டிற்குள் மயங்கிய நிலையில் இருந்த 4 பேர் மீட்பு..!

உளுந்தூர்பேட்டை அருகே உள் பக்கமாக பூட்டிய வீட்டிற்குள், சமையல் கேஸ் கசிவு காரணமாக மயங்கிய நிலையில் இருந்த 4 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோட்டையாம்பாளையத்தை சேர்ந்த சரஸ்வதி மற்றும் 3 பிள்ளைகள் வழக்கம் போல் நேற்றிரவு வீட்டை உள்பக்கம் தாழிட்டு தூங்கியுள்ளனர். காலை 10 மணி வரை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து சென்று பார்த்த போது 4 பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, 4 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமையல் கேஸ் சிலிண்டரின் வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கேஸ் கசிந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏற்படவில்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments