‘ஒத்த ரோசா’க்களை அழகியாக்கிய போலி அழகிப் போட்டி ராசாக்கள்.! பணம் கொடுத்தால் அழகி பட்டம்..!

0 4643
‘ஒத்த ரோசா’க்களை அழகியாக்கிய போலி அழகிப் போட்டி ராசாக்கள்.! பணம் கொடுத்தால் அழகி பட்டம்..!

மிஸ் தமிழ்நாடு, மிஸ்ஸஸ் தமிழ்நாடு என்ற பெயரில் போலியாக நிகழ்ச்சி நடத்தி பணம் வசூலித்துக் கொண்டு அழகிப் பட்டம் கொடுப்பதாக எழுந்த புகார் குறித்து கோயம்புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பல்லு போன கிழவிகளாக இருந்தாலும் பணம் கொடுத்தால் போதும்,  தலை முடிக்கு டை அடித்துக் கொண்டு...டைட்டான மேக்கப் போட்டு மேடையில் ஏற்றி பூனை நடை போட வைத்து, கூச்சமே இல்லாமல் தலையில் கவரிங் கிரீடத்தை வைத்து மிஸ்ஸஸ் தமிழ்நாடு என்று பட்டம் கொடுக்கும் கும்பல் ஒன்று தமிழகத்தில் வித விதமான அழகி போட்டிகளை நடத்திவருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

மிஸ் தமிழ்நாடு, மிஸ்ஸஸ் தமிழ்நாடு ஆகிய பெயர்களில் உரிமம் பெற்று நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த ஜோ.மைக்கல் என்பவர் இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் விரிவான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த ஜான் அமலன் என்பவர் மிஸ் தமிழ்நாடு அழகிப்போட்டிகள் நடத்துவதாக கூறி பதிவுக்கட்டணம் என்று லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அப்போது ஜான் அமலன் தரப்பினர் இனி இந்த பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று எழுதிக்கொடுத்துச்சென்றனர். தற்போது கோவையில் மீண்டும் மிஸ் தமிழ்நாடு பெயரை பயன்படுத்தி ஜான் அமலன், நிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிவிப்புகளை வெளியிட்டு பண வசூலில் ஈடுபட்டு வருவதாக ஜோ மைக்கேல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்த புகார் தொடர்பாக தன்னிடம் கோயம்புத்தூர் பீளமேடு காவல் உதவி ஆய்வாளர் விசாரித்ததாக கூறிய ஜான் அமலன், இந்த அழகி போட்டியை தான் நடத்தவில்லை என்றும் வேறு ஒரு நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் மட்டுமே செய்வதாக தெரிவித்தார். இதற்கு முன்பு ஒரே ஒரு முறை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தன்னை மோசடி வழக்கில் கைது செய்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments