காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீடு புகுந்து கஞ்சா போதையில் ரகளை செய்த நபர் கைது..!

கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தி வீடுபுகுந்து ரகளை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சூளைமேடு பகுதியில் வசிக்கும் ரஷித் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை காதலிப்பதாக வற்புறுத்திய நிலையில் அந்தப்பெண் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷித் நேற்று கஞ்சா போதையில் அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்துள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட ரஷித் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ள நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Comments