சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்களாக ஆய்வு செய்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்..!

0 5584

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி சுமார் 6 மாதங்களாக ஆய்வு செய்து வந்த 4 விண்வெளி வீரர்கள், ஸ்பேஸ் எக்ஸ் கேப்சுல் Freedom மூலம் பூமிக்கு பத்திரமாக திரும்பினர்.

அண்மையில் ஆய்வு பணிக்கு அமெரிக்கா, ரஸ்யா, ஜப்பானை சேர்ந்த 4 பேர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு தங்கி ஆய்வு செய்த அமெரிக்காவை சேர்ந்த ஜெஸ்ஸிகா வாட்கின்ஸ், பாப் ஹின்ஸ் உள்ளிட்ட 3 பேரும், இத்தாலியை சேர்ந்த சமந்தா கிறிஸ்டோபெரட்டியும் கேப்சூல் மூலம், புளோரிடா மாகாணத்தையொட்டிய அட்லாண்டிக் கடல்பகுதிக்கு வந்தனர்.

உடனடியாக 4 பேரையும் அங்கிருந்த மீட்பு குழுவினர், படகில் மீட்டு அழைத்து சென்றனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments