எலெக்ட்ரிக் கடையில் செட்டரை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை..!

0 2161

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள எலெக்ட்ரிக் கடையில் ஷட்டரை உடைத்து இருட்டில் டார்ச் லைட் மற்றும் தீக்குச்சி வெளிச்சத்துடன் கொள்ளையடித்த 2 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மானக்ராம் என்பவர் தனது கடைக்கு வந்தபோது செட்டர் உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம், உண்டியலில் இருந்த  5 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டார்.

புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், இருட்டில் 2 பேர், 3 செல்போன்கள், 10-க்கும் மேற்பட்ட பெண் ட்ரைவ் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்புவதை கண்டுபிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments