அமேசான் பே.. சிக்னல் வீக்கா... ஆட்டைய போட ஆக்டிங்.. இளைஞருக்கு தர்ம அடி..!

0 3995

செல்போன் கடை ஒன்றில் அமேசான் பே மூலம் 18 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியதாக கூறி போட்டோஷாப் புகைப்படத்தை காண்பித்து மோசடியாக செல்போனை வாங்கிச்செல்ல முயன்ற தமிழக இளைஞர் புதுச்சேரியில் கையும் களவுமாக சிக்கினார். ஒரு நாள் முழுக்க கடையில் காத்திருக்க வைத்து, சிறப்பாக கவனித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ராணி மொபைல்ஸ் கடைக்கு சென்ற இளைஞர் ஒருவர் ரெட்மி நோட் - 10 ப்ரோ மக்ஸ் என்ற செல்போனை வாங்க விலை பேசி உள்ளார். அந்த செல்போனுக்கு 18 ஆயிரம் ரூபாயை கடைக்காரர் விலையாக கூறிய நிலையில் உங்களிடம் அமேசான் பே ஆப் உள்ளதா ? என்று கேட்டுவிட்டு வெளியே சென்றவர் சிறிது நேரத்தில் உங்கள் கடையின் அக்கவுண்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் அனுப்பி விட்டேன் பாருங்கள் என்று கூறி உள்ளார். பணம் வரவில்லை என்றதும் சிக்னல் வீக்காக இருக்கு போல , அதான் உங்களுக்கு தகவல் வரவில்லை புதிய செல்போனை தாருங்கள் என்று கூறி உள்ளார்.

கடையில் இருந்தவர்கள் அந்த இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததால் செல்போனை அவரது கையில் கொடுக்காமல் அவரை அங்கேயே காத்திருக்க செய்துள்ளனர். நேரம் நீண்டு கொண்டே செல்ல, பணம் அனுப்பியதாக குருஞ்செய்தி ஏதும் வரவில்லை. இதையடுத்து அந்த இளைஞர் பணம் அனுப்பியதாக செல்போனில் காண்பித்த ஸ்க்ரீன் சாட் குறுந்தகவலை வாங்கிப்பார்த்த போது அது போட்டோ ஷாப்பில் உருவாக்கப்பட்ட போலியான அமேசான் பே குறுந்தகவல் என்பதை கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து சிறப்பாக கவனித்த கடையின் உரிமையாளர், போலியான ஆப் மூலம் ஏமாற்ற முயன்ற இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர் மயிலாடுதுறை அடுத்த மோழையூர் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பதும் செல்போனில் வேகமாக போட்டோ ஷாப் செய்வதில் வல்லவரான சத்தியமூர்த்தி இதே போன்று பல்வேறு கடைகளில் பணம் அனுப்பியதாக கூறி மோசடியாக பொருட்கள் வாங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments