விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் நடந்ததா? -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

0 3849

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில், குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்ற மாற்றுப்பாலினத்தோரின் உடல், மன ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றபின் பேட்டியளித்த அமைச்சர், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இரட்டை குழந்தைகளை பெற்றார்களா? என விசாரித்து, ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி இரட்டை குழந்தை பிறந்தது என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரனையில் நடைபெற்று வருகிறது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு இரட்டை குழந்தைகளை பெற்றார்களா,விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து , ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

வாடகை தாய் விவகாரத்தில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் இருவரும் தேவைப்பட்டால் நேரில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments