பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்.. பக்கவாட்டில் இருந்த லாரியில் மோதி மாணவர் காயம்..!

0 2092

ராஜபாளையம் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தவறி விழுந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லமநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் சரவணன் ராஜபாளையத்தில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது சாலையோரம் நின்றிருந்த லாரியின் பக்கவாட்டில் மோதியநிலையில் தடுமாறி சாலையில் விழுந்து உருண்டு சென்றதில் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments