கீழே பணம் கிடப்பதாக கூறி இருசக்கர வாகன ஓட்டியின் கவனத்தை திசைதிருப்பி ரூ 2.35 லட்சம் கொள்ளை ..!

0 2694

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில், இருசக்கர வாகன ஓட்டியின் கவனத்தை திசைதிருப்பி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த தாமஸ், வங்கியிலிருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு, எஸ்டேட் சர்வீஸ் சாலையில் உள்ள தனது இரும்பு தொழிற்சாலைக்கு வந்துள்ளார்.

இடையில் செல்போன் அழைப்பு வரவே, வண்டியை நிறுத்தி விட்டு, பேசியுள்ளார். அப்போது மற்றொரு வண்டியில் பின்தொடர்ந்து வந்த 3 பேரில், ஒருவர் இறங்கி, கீழே பணம் கிடப்பதாக கூறவே, தாமஸ் அந்த பணத்தை எடுக்க முயற்சித்தார்.

உடனே மற்ற இருவரும் வண்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments