தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் உயிரிழந்த மேலாளரின் கையெழுத்து போட்டு ரூ.9 கோடி மோசடி..!

0 2339

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில், உயிரிழந்த மேலாளரின் கையெழுத்தை போட்டு, 9 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, துணை மேலாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவல்லிக்கேணி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த சிம்சன் சாம்கோ, கடந்த 2020ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன் பின்னரும் ஆவணங்களில் அவரது கையெழுத்து இருந்ததால், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விசாரணையை முன்னெடுத்தது.

அப்போது அதே அலுவலகத்தில் துணை மேலாளர்களாக பணியாற்றிய ஆனந்தனும்,. ஹரிஹரனும் சிம்சனின் கையெழுத்தை போட்டு மோசடி செய்தது அம்பலமானது.

இதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவரை மத்திய குற்றப் பிரிவின் ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments