இரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டி பெண்ணிடம் அத்துமீற முயன்ற போதை ஆசாமிக்கு அடி , உதை..!

0 1997

சென்னை அம்பத்தூரில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டி பெண்ணிடம் அத்துமீற முயன்ற போதை ஆசாமியை, அடித்து உதைத்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.

நேற்றிரவு கள்ளிக்குப்பத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற போதை ஆசாமியை பிடித்த மக்கள், கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அவனிடம் விசாரித்த போது, ஒரு பெண்ணை தொட முடியுமா? என தனது நண்பர்கள் சவால் விட்டதாகவும், அதனால் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளான்.

இதனையடுத்து அவனை, பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments